பணமே உயர்வாம் உலகில்

பண​மே பாடும் செல்வன் கையில்!
பினமே பேசும் பணத்தின் வழியில்!
சினமே போகும் நிறைந்தால் பையில்!
சுகமே போகும் முடிந்நதால் கையில்!

உள்ளவர் வாழ்க்கை உயர்வாம் உலகில்!
ஊமையன் கூட உயர்வான் வாழ்வில்!
உத்தமன் கூட பேசா மடந்தை!
உடமைக்கு உரியவன் இல்லாது பொனால்!

பணத்துடன் பணமே ஒன்றாய் சேரும்!
பணமே பணத்தை ஒன்றாய்க் கவரும்!
பணத்துக்குரியவன் பலரைக் கவர்வான்!
பணமே இல்லான் உறவுகள் இழப்பான்!

செல்வன் அவனே ஊரில் பெரியோன்!
சேர்ந்தவன் கூட அவனில் உயர்ந்தோன்!
சீதனம் பெற்றே துணையைப் பெறுவான்!
சிலையாய் இறந்தால் ஊர் மத்தியிலிருப்பான்!

சில்லரை சிலதை வீசி எறிவான்!
சிந்தை மயங்கி செயலது புரிவான்!
சீமான் என்றே பெருமை கொள்வான்!
சீவன் வாழ எதனையும் செய்யான்!

உயர் குலத்தின் சின்னம் பணமேயாகும்!
உலகம் மதிக்கும் மேலோனாகும்!
உட​லெழில் பெறுவதும் பணத்தாலாகும்!
உரை அம்பலமாவதும் அதனாலாகும்!

பணத்தின் தேவை உலகுக்குப் பெருமை!
பண்பாய் அதனை பெறுவது திறமை!
அறிவாய்! அறிவாய்! இதை உணர்வாய்!
அன்பாய் சிறப்பாய் எமை அழைப்பாய்!

எழுதியவர் : ஜவ்ஹர் (14-Mar-14, 10:02 pm)
பார்வை : 105

மேலே