மரண வாசல் பகுதி 4

அரசு கலங்கியக் கண்களோடு,
ஆணாப், பொன்னானுக் கூடத் தெரியல ! உள்ள வரத்துக்கு முன்னாடித்தான் அம்மா கோல் பண்ணாங்க meternity ward டுக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்கன்னு.
இந்த travelling முடிஞ்சு சரியா ஒரு வாரம் லீவு ! ஹனிமூனுக்கு ஹாவாய் போறதா மேடம் பிளேன் பண்ணிட்டாங்க. இந்த travelling முடிஞ்சி நான்……
புன்னகையின் ஊடே விமானத்தை இயக்கிக் கொண்டு சொன்னான் உதயா.
என் பொண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்கு ! பேசி முடிக்கலாம்னு நெனச்சிருந்தேன்.
மீனாவும் அவர் பங்குக்கு அவர் மனதில் உள்ளதைச் சொன்னார்.
மஞ்சரி அங்கேயே அப்படியே அமர்ந்து விட்டாள். கண்களில் கண்ணீர் கரைப் புரண்டோடியது. பிரசாந்த் என்ன propose பண்ணி எனக்காக வெயிட் பண்றேன்னு சொன்னான்.
பனிமலர் கேப்டனைப் பார்த்து,
எதாச்சம் பண்ணுங்க கேப்டன்.... சிக்னல் போலனா என்னே.... வேறே எதுவுமே பண்ண முடியாதா ? உதயான்னா நீங்க ஏதும் பண்ண முடியாதா ?
செத்து விடுவோம் என்ற பயத்தில் கேப்டன் ஹரி சந்திரனையும் துணைக் கேப்டன் உதயாவையும் மாறி மாறி கேள்விகளைக் கேட்டாள் பனிமலர்.
கஸ்வின் திரு திருவென்று விழித்தான். அவன் அருகில் பதற்றமாய் நின்றிருந்த பனிமலரின் கைகளைப் பிடித்து இழுத்தான்.
பனி... எனக்கு உன்னே ரொம்ப பிடிச்சிருக்கு. பிளிஸ், பனி நாமே சாகப் போறது confirm ஆயிடுச்சி. என் லவ்வே ஏத்துக்கோ ! செத்தாலும் நீ என்னே ஏத்துகிட்டேனு சந்தோசமா சாவேன் ! பிளிஸ் பனி !
ச்சே... போடா... அழுதுக் கொண்டே அவனைத் தள்ளி விட்டு விட்டு பனிப் பெண்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு ஓடினாள் பனிமலர்.
வயசுக் கோளாரப் பாரு ! சாகராதுன்னு முடிவாயிருச்சி அவனைச் சொல்லியும் குத்தமில்லை ! எல்லாம் கடவுளோடு முடிவு ! அவர் முடிவு பண்ணிட்டாரு ! இதுக்கு மேலே நாமலே நெனச்சாலும் எதுவும் பண்ண முடியாது ! சாகறது உறுதியாச்சி !
அருணாச்சலம் வெறுப்போடு சொன்னார்.
வாசலை நெருங்கும்......