கடவுச்சீட்டு

எதிர்கால தூக்கங்களையும்,
சந்தோசங்களை, தொலைத்து
உறவுகளின் சுமை களைய
கடவுச்சீட்டும் பெற்றேன்...

தங்கையின் திருமணமும், தந்தை
கடனும், பொருளாதாரமுமே
என்னை அயல் தேசத்துக்கு
அனுப்பி வைத்தது...

ஏதோ தைரியத்தில் கடல்
தாண்டியும் வந்தேன்
கண்கள் நிறைய வாழ்க்கை
கனவுகளை சுமந்தபடி...

என்னுடன் படித்த பாடசாலை
நண்பர்கள், உறவுகள்
அனைத்தையும் ஒரு விமான
பயணத்திலே இழந்தேன்...

தாயின் அழைப்புகள், ஸ்பரிசங்களில்
எழுந்த நாட்கள் தொலைந்து
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் தொடங்கிவிட்டது...

இதயம் தாண்டி பழகிய உறவுகள்,
நண்பர்களின் நினைவுகள் எல்லாம்
ஒரு கடலை தாண்டிய கண்ணீரிலே
கரைந்து மறைந்து விடுகிறது...

விடுமுறை தினங்களில் வீதியோரம்
விளையாடி மகிழ்ந்த நினைவையும்
நண்பர்களையும் நினைக்கும் போதே
கண்ணீர் விழிகளை நனைக்கின்றது...

நெருங்கிய உறவினதும், நண்பரினதும்
திருமணத்துக்கான அழைப்பிதலுக்காக
ஒரே ஒரு தொலைபேசி ஊடான
வாழ்த்துடனே முடிவடைகிறது உறவு...

தொலைபேசி அழைப்புகளிலும்
கடிதங்களிலும் வருகின்ற
உறவினதும், நண்பனினதும்
மரண செய்திகளுக்கு...

கண்ணீர் துளிகள் மட்டுமே
ஆறுதல் தருகின்றது...
எவ்வளவு தான் சம்பாதித்தும்
நாங்கள் அயல் தேசத்து ஏழைகளே...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 5:37 pm)
பார்வை : 104

மேலே