மலரும் வண்டும்
வண்ண வண்ணமாய்
வாசனை மிகுந்தததாய்
செடியிலும் படர் கொடியிலும்
இதழ்கள் மலர்ந்து பூத்தாயோ...
மழை நின்ற பின்னே
தோன்றிய வானவில்லின்
சாயம் கொண்டுதான்
உனக்கு வர்ணம் சேர்த்தாயோ...
இல்லையேல் உன்னிடம்
உறவாடிட வந்தமர்ந்து சென்ற
வண்ணத்துப் பூச்சியிடம் தான்
வர்ணங்களை திருடிக் கொண்டாயோ
யார் சொல்லித்தான் அறிந்தனவோ
திசை மாற்றும் வண்டுகளும்
நீ வயதுக்கு வந்த மொட்டில்
பூப்படைந்த சேதிதனை...
இல்லையேல் நீதான் காற்றை ஏமாற்றி
தலையசைத்து சமிக்ஞை செய்தாயோ
படை எடுத்து வருகின்றது
உன்னில் சுரந்த தேன் அருந்த...