முத்தம்

உன் காதுகளோடு
என்னுதடுகள்
முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்பவளே...
உன்னுதடுகளோடு
என்னுதடுகள்
ரகசியம் பேசும்
போது மட்டும்
ஏனடி முத்தம்
என்று கத்துகிறாய்...
எதையும்
தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள
முடியும்
என் இதயத்துக்கு
உன் மெல்லிய
முத்தத்தைத் தவிர...
உயிரும் உயிரும்
மேலேறிகூடுவிட்டுக்
கூடுபாயும் வித்தை
கற்குமிடம் தான்
நம் இரு உதடுகள்
சந்திக்குமிடமா...