பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் மருமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
மகளுக்கு தந்தை பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் கவிதை ...
வாழ்வின் வரமே நீதானம்மா
இதயத்தின் கரமும் நீதானம்மா !
அம்மாவின் மறுஉருவம் நீதானம்மா
வம்சத்தின் முதல்விழியே நீதானம்மா !
அசோக மாளிகையின் தங்கராணியே
ஆனந்த தொட்டிலில் உறங்கும் மகாராணியே !
வளர்ச்சியின் சிரமாய் இருக்கும் தேன்மணியே
கவலையின் கண்ணீரை துடைக்கும் கண்மணியே !
மகிழ்ச்சியில் மகிம்மையாய் இருக்கும் பொன்மணியே
வாழ்க்கையின் நம்பிக்கையாய் இருக்கும் நவமணியே !
தங்க தட்டில் நான் தாங்கும் என் சுவாசராணியே
வாழ்வில் என்னை வழிநடத்தப்போகும் கலைராணியே !
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன் மகளே
வாழ்வோம் வாழ்வோம் இனிய வாழ்க்கை பொன்மகளே !
இப்படிக்கு
உன்னுயிர் தந்தை
இரா.அசோகன் ரஞ்சிதா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.03.2014
அப்படியே
இந்த மாமனின் வாழ்த்துக்கள்
என்அன்பு தங்கமருமகளே !