ஏன் எனைப் பிடிக்கவில்லை

என் உள்ளம் தொட்டு - என்
மனசை விட்டு1
என் உள்ளச் சிறையை விட்டு!
​செல்வதேனோ என்னவளே? - உனை
ஏமாற்றிடுவேன் என்பதாலா?

உன் அழகு கண்டு!
ஊண் உறக்கமின்றி!
உன் நினைவில் மயங்கவிட்டு!
செல்வதேனோ என் கண்ணே?
என் மேல் ஐயம் வந்ததாலா?

காந்தக் கண்கள் கண்டு!
காதல் உன் மேல் கொண்டு!
கரும்பின் இதழ் சுவை கொண்டு!
செல்வதேனோ என்னவளே?
இவன் உனை மறப்பானோ என்பதாலா?

முக்கனிகள் இனிக்கவில்லை!
முழு நிலவும் ரசிக்கவில்லை - எனை
முடங்கிக் கிடக்க விட்டு!
செல்வதேனோ என்னவளே? - உனை
ஆட்டிப் படைத்திடுவேன் என்பதாலா?

அழகின் இருப்பிடம் நீ!
ஆணவம் கொண்டவள் நீ!
ஆடவன் எனை மறந்து!
செல்வதேனோ இனியவளே?- இவன்
வேறு மனை நாடிடுவான் என்பதாலா?

ஆகாயக் கோட்டை கட்டி!
அதிலுன்னை ஆளவைத்து!
அனுபவிக்க நினைப்போன் விட்டு!
செல்வதேனோ என் கண்ணே?
ஆண் ஆதிக்கம் முன்னிற்கும் என்பதாலா?

மானழகுக் கொத்தவளே!
மயிற் தோகைக் கொப்பவளே!
குயிலோசைக் குரியவளே!
கோமகன் எனை விட்டுச் செல்வதேனோ?பெண்ணே!
சமையல் செய் பெண்ணாக்கிடுவேன் என்பதாலா?

உன் அழகுக்கு ஒப்பில்லை!
உன் மனதுக்கு ஈடில்லை!
என் மனசெல்லாம் கவர்ந்தவளே!
ஊரவன் எனை ஏன் பிடிக்கவில்லை? கண்ணே
பின்னாளில் ஒதுக்கிடுவேன் என்பதாலா?

உன் உள்ளத்தில் இடமுண்டு!
உன் ஓரச் சிரிப்பதைச் சொல்லும்!
உன் காதல் என் மேலுண்ணடு!
உன் மலர்ந்த முகமதைச் சொல்லும்!
பெண்ணே ஏன் எனைப் பிடிக்கவில்லை?
பின்னாளில் விரட்டிடுவேன் என்பதாலா?

எழுதியவர் : ஜவ்ஹர் (15-Mar-14, 10:46 pm)
பார்வை : 145

மேலே