என்றோ பள்ளிப் பருவத்தில் எழுதிய கவிதை
அழுகையில் கரைந்த இரவுகள் எத்தனையோ
அழுகிப்போன கனவுகளும் அத்தனை !
அகப்பையில் இருக்க வேண்டிய கனவாம் இன்ஜினியரிங்
குப்பையில் இருக்க வேண்டியதாம் விஞ்ஞானி கனவு !
என்னை தடுத்தது முள்ளெனில்
பிடுங்கி வீசியிருப்பேன்
ஆலமரம் ஆகிவிட்டதே
நான் உருவாக்க நினைத்தோ ஆய்வுக்கூடம்
ஆனால் தள்ளப்பட்டதோ கல்விக்கூடம் !
சரி...என்று
தேடிச்சென்றேன் ஞானப்பழத்தை
கொடுக்கப்பட்டதோ ஏட்டுச்சுரைக்காய்
மிஞ்சியதோ வெரும் மதிப்பெண் கொட்டை ! !
மரம் தரும் கொட்டை என நினைத்து விதைத்தேன் - பின் வெரும்
பணம் தரும் கொட்டை என தெரிந்து வெறுத்தேன் ! ! !
---தவறு இருப்பின் மன்னிக்கவும்---