வழக்கொழிந்த பன்மை

முதலில் ஒரு விடையம் கூற விரும்புகிறேன். வழக்கொழிதல் என்பதை அனைத்து இடங்களிலும் தவறாகவே எண்ண வேண்டாம். பழைய பாத்திரம் தானே நெழிந்திருக்கும்.
--------------------------------------------------
தமிழில் பேச்சு மொழிக்கும், எழுத்து நடைக்கும் அளவுக்கு அதிகமாகவே வேறுபாடுகள் இருக்கும். பிரபல மொழிகளான ஹிந்தி, ஆங்கிளத்தில் இவ்வளவு வேற்றுமை காண இயலாது, இதற்கும் அதே பாத்திரக் கதை தான் காரணம். அப்படிப்பட்ட வேறுபாடுகளில் அண்மையில் நான் கவனித்த ஒரு வேறுபாடை இங்கு பகிர்கிறேன்.
“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா”
“அந்த ஆளு பத்து மாடு வச்சிருக்கான் பா”
“அந்த மூனு நாயும் வரத பாரு”
இந்த வரிகளில் எல்லாம் நாம் எப்படி பேசும் போது பன்மை வரவேண்டிய இடங்களில் ஒருமையையே பயன்படுத்துகிறோம் என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டு. இவையெல்லாம் பேசும் போதும், பேச்சு நடையை உரை எழுதும் போதும் பயன்படுத்தப் படுகிறது. இதர உரை, கவிதை, கட்டுரைகளில் சரியாகவே பயன்படுத்தப் படுகின்றன.
மேலும் ஆங்கிளம் கலந்து பேசும் போதும் இதை நாம் பின்பற்றுகிறோம். எடுத்துக்காட்டாக மட்டைப்பந்து போன்ற விளையாட்டுக்களை விளையாடும் போது “Twenty Runs” என சொல்கிறோம் ஆனால் அதே வார்த்தையை தமிழ் கலந்து சொல்லும் போது, “இருபது Runs” என்றோ “இருபது Runகள்” என்றோ சொல்வது இல்லை. “இருபது Run” என்றே சொல்கிறோம். இங்கும் பன்மையை விடுகிறோம். இதர எடுத்துக்காட்டுக்கள்.
“அவென் பத்து car வெச்சிருக்கான்”
“அந்த வீடு மொத்தோ பன்னன்டு floorரு”
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் புரியும். மாற வேண்டியதில்லை தெரிந்து கொள்வோம்.

எழுதியவர் : ந.நா (17-Mar-14, 1:34 am)
சேர்த்தது : நநா தமிழ்
பார்வை : 136

மேலே