வெவ்வேறு நிழல்

கிடைப்பதில்
ஒன்றுமில்லை
காத்திருப்பதில்
கிடைப்பது போல....

நாளை
பார்ப்பதில்
இன்றில்
தொலைவதைத் தவிர
வேறில்லை....

எதுவென
சொல்வதில்
காணாமல் போவது
அதுவென
இருக்கும்
சொல்.....

தொடர்புகளில்
அறுந்துகொண்டே
நீளும் பாதையொன்றில்
ஒரே மரம்
வெவ்வேறு நிழலில்....

உன்னை மறக்க
நீ நினைக்கும்
ஒன்றில்
நீ மாற்றுருவில்
மறக்கப் படுகிறாய்....

எழுதியவர் : கவிஜி (17-Mar-14, 11:29 am)
Tanglish : vevveru nizhal
பார்வை : 99

மேலே