எங்கே செல்கின்றாய் - குமரிபையன்
![](https://eluthu.com/images/loading.gif)
எங்கே செல்கின்றாய்..? அப்பா..
என்னைவிட்டு எங்கோ செல்கின்றாய்..?
எங்கென்று சொல்வாயோ..?
என்காதில் சொல்லிவிட்டு செல்வாயோ..?
நாடியே செல்கின்றேன்..! மகளே....
நல்ல வீரனாய் செல்கின்றேன்..!
தொல்லைகள் இல்லாமல் நாட்டின்
எல்லையில் காவலாய் நிற்கின்றேன்..!
என்றைக்கோ வருகின்ற ஒருயுத்தம்
எழுப்புமாம் குண்டுகளின் சத்தம்
எப்போது வருமென்று நித்தம்...! அப்பா...
எண்ணத்தில் சாகிறாயே மொத்தம்...?
நீ அமைதியாய் துயிலுரும்போது
நான் விழிதிறந்து நின்றுக்காப்பேன்
நானுன்னோடு விளையாடி இருந்தால்
நம்முன் வாராதோ பொல்லாத யுத்தம்..?
எதிரிகள் உனைதாக்க வந்தால்
என்முகம் நினைத்திடு உள்ளால்
எமானாக மாறுவாய் நீ தன்னால்
எங்களை காக்க முடியுமே உன்னால்..!
எங்கெங்கு நான் சென்றபோதும்
எனதங்கங்கள் எனை மறக்ககூடும்
உன்தளிர் முகமுத்தங்கள் ஓதும்
உள்ளே அப்பாவின் நினைவோடு ஓடும்..!
முத்தங்கள் கன்னத்தில் தருவேன்
முத்துபோல் எண்ணத்தில் வருவேன்
அப்பா.. அருகிலே சற்றுவந்து நில்லு
அன்புடன் விடை தாரேன் செல்லு..!
கண்ணீரில் சொல்கிறாய் கண்ணே
கடுமனத்தோடு செல்கிறேன் பொன்னே
எப்போதும் நீ இருகிறாய் உள்ளே
என் உயிராய் நினைக்கிறன் உன்னை...!
====================================
எல்லையில் காவல் காக்கும் இராணுவ வீரர்களுக்கு இந்த வரிகள் சமர்ப்பணம்.
--குமரிபையன்