மனிதன் மாறவில்லை
குரங்கிலிருந்து பிறந்தவனாவான் அதில்
குறையேது இன்றும் வைக்கவில்லை
குணத்தில் குரங்கினை ஏன்தான் கொண்டான் பரிணாம வளர்ச்சியும் புரியவில்லை
பெற்றவர் காதலில் பிறந்த பிள்ளை
மனிதனாய் தோற்றம் கொள்கின்றான்
அவர்வந்த வழியும் ஆதியில் ஒன்றாய்
இவனும் அவ்வழி இங்கு நிற்கின்றான்
மாறவில்லை எங்கும் மறைப்பதில்லை
மனிதன் தான் செய்யும் சேட்டைகளை
இதனைக்கொண்டு நாமும் உணர்வோம்
மனிதம் இங்கு குரங்கின் சாயலிலே
காதல் கொண்ட குரங்கு ஒன்று
தினமும் அதனை மாற்றிடுதே
கல்யாணம் கொண்ட குரங்கு ஒன்று
புதிதாய்க் காதலைத் தேடிடுதே
ஓரிடம் வேலையில் சேரும் குரங்கு
வருடம் இரு இடம் மாற்றிடுதே
வந்தது போக மிச்சத்தை கூட
தனக்கென பத்திரம் செய்திடுதே
தன்னிலம் விட்டு வேறிடம் தாவ
வாலில்லாது சாத்தியம் செய்திடுதே
தன குறை மறந்து பிறர் குறை அறிய
புதிய சாத்திரங்கள் படிக்கிறதே
கையில் உள்ளதை கண்கொண்டு காணாது
மாற்றான் வேலியில் நோக்கிடுதே
பகலும் இரவும் கடந்து போக
மன வேஷம் தினமும் மாற்றிடுதே
அவர் வாய் காண தன் வயிறுண்டு
கேளிக்கை தினமும் செய்கிறதே
தன குடி யாரென அறியா நிலையில்
தன்னை மறந்து வாழ்கிறதே
குரங்கின் பெயரில் குற்றம் இல்லை
எனினும் அவர் நம் மூதாதையார்
அவர்தம் மாறி மனிதனை கொடுக்க
மனிதனும் ஏனோ மாறவில்லை
இதனை அவர்தம் பால் காட்டும் நன்றி என்பதா
இவன் இன்று மனவளர்ச்சி குன்றியதென்பதா
-இப்படிக்கு முதல்பக்கம்