ஏழை



*அரசு விடுமுறை
அன்பர்களுடன் கழிய‌
இரண்டாம் சனி
இன்பமுடன் கழிய‌
வேலை நாட்கள்
வெறுமெனே கழிய‌
வாழ்க்கை முழுதும்
வசந்தமுடன் கழிய‌
ஊக்கமுடனே வாழ்கின்றனர்
உயர்ந்தோர் பெருமக்கள்!..


*என் பாவம் செய்தான்
என் ஏழை குடிமகன்?
கேப்பை கூழைக்
கட்டியாக செய்து
கலப்பை ஓட்டிவிட்டு
களைப்பாறும் நேரத்தில்
கடிக்க வெங்காயம்
கல் உப்பு கலந்து
கடும்பசி தீர்ப்பான்
கஷ்ட்டப்படும் அவன்...

*உச்சிவெயில் நேரத்தில்
உண்டுவிட்டு துண்டு விரித்து
அமர்வான் அவன்
அரை நொடியும் ஆகாது,
உற‌க்கமில்லா அவனை
உர‌க்கக் கத்தியழைப்பான்
உழவு ஓட்ட
உடையோன் ,
அவன்கொண்ட வயலை

*மாலை கறுக்க‌
மாடுகளை மேய்த்துவிட்டு
மனுசமக்க வீடுதிரும்ப‌ அவன்மட்டும்
கருசக்காடு போய்விட்டு
கருஞ்சுள்ளி பொறுக்கிகிட்டு
கடைசியாக வீடுதிரும்புவான்
கஞ்சிவைத்து குடிக்க!...

* தென்னம் ஓலையை
சேர்த்துவைத்து
செதுக்கி செதுக்கி
சேர்த்துக் கட்டி
தெருத் தெருவாய்ப் போய்ச்சென்று
தெருவெல்லாம் கூட்டி
கழிப்பறை கழுவி
கடைதெருவையும் கூட்டி
காலில் புண்களுடனே
காலங்கள் கழிய‌
கடைசிவரை ஒன்றுமில்லை
கல்விபெறா அவனுக்கு!..

*வாழ்க்கைதான் மாறுமோ?
வசந்தம்தான் வாருமோ?
ஏழ்மைதான் சாகுமோ?
ஏற்றம்தான் வாருமோ?

‍ ‍ ‍ ஏக்கமுடன்
ஏழை

எழுதியவர் : (18-Feb-11, 9:33 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 445

மேலே