தொந்திக் குலுங்கியது

*ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

கோழை என்று அவனை
கேலி செய்தார்கள்
செய்துக் காட்டினான் ஓரு சாதனை.
*
கிழவிகளி்ன் மனச் சுமையை
இறக்கி வைக்கிறது
அவர்கள் பாடும் ஒப்பாரி.
*
சிரிக்கச் சிரிக்கத்
தொந்திக் குலுங்கியது
குழந்தைக்குச் சிரிப்பு.

எழுதியவர் : ந.க.துறைவன் (17-Mar-14, 5:16 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 140

மேலே