தேர்தல் வீணோ எண்சீர் விருத்தம்

மொழிவாரி மாநிலமாய் பிரித்தோம் மண்ணை!
==மூண்டெழுந்த பாரதத்தை உடைத்தோம்! கல்வி
மொழிகொண்டே பின்னேறக் கண்டோம்! நீரின்
==வழிகொண்டும் தகறாறு வளர்த்து நின்றோம்!
விழுமழையை வான்பொய்க்கக் காட ழித்தோம்!
==விவசாயத் தோடுழவும் வீழ வைத்தோம்!
தொழுவாராய்ப் பிறனாட்டு வேலை வேண்டித்
==துரத்துகிறோம் பிள்ளைகளைத் தூர தேசம்!

மொழிவாரிப் பிரிந்திருந்தும் பார தத்தை
==முன்,நிறுத்தித் திரண்டவர்கள் எங்கே! எங்கே!
இழிவாக அந்நியர்கள் நடத்தி னாலும்
==எல்லோரும் ஒன்றென்றோர் எங்கே! எங்கே!
ஒழிந்தாலும் பொருளெதும் பிற,நாட் டெல்லை
==ஒண்டாதென் றுயிர்விட்டோர் எங்கே! எங்கே!
கழிந்தாரோ மயிரென்றெம் கண்முன் மக்கள்?
==கை,மெய்யைக் கருப்பாக்கும் தேர்தல் வீணோ?
++++ ++++ ======= +++++ +++++++ =======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (17-Mar-14, 6:55 pm)
பார்வை : 70

மேலே