நான் யார் கட்சி சின்னமா

ஒற்றைக் காலில்
சுற்றிச் சுற்றி ஆடுவேன்
ஆனாலும் பம்பரமல்ல ....!!

சிவந்து மலர்ந்து
சிரித்து மயக்குவேன்
ஆனாலும் தாமரையல்ல ...!!

அதிகாலையில் மெள்ளமெள்ள
அழகாகக் கண்விழிப்பேன்
ஆனாலும் உதயசூரியனல்ல....!!

சுட்டிப்பேச்சில் இனிப்பேன்
சுகந்தமணம் பரப்புவேன்
ஆனாலும் மாம்பழமல்ல ....!!

கோபம்வந்தால் சத்தமாய்
கத்தி ஊர்க்கூட்டுவேன்
ஆனாலும் முரசல்ல ....!!

இரட்டைசடை போடுவேன்
இருபச்சை ரிப்பன்கட்டுவேன்
ஆனாலும் இரட்டைஇலையல்ல ...!!

எழுதிஎழுதி அழிப்பேன்
எடுத்துஎடுத்து கொடுப்பேன்
ஆனாலும் கையல்ல .....!!

தலைக்குமேலே வணங்கி
தலைவன்போல நடிப்பேன்
ஆனாலும் வேட்பாளரல்ல ....!!

சேட்டை செய்யும் பாப்பாநான்
கோட்டை போக வயசில்லை - வாக்கு
வேட்டை யாடும் வேளையில் -கள்ள
வோட்டை யாரும் போடாதீங்க ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Mar-14, 11:52 am)
பார்வை : 194

மேலே