கூண்டுக்கிளி

எதிர்காலம் தெரியாத
கூண்டுக்கிளி போல தான்
நானும்......உன்

வார்த்தைகளுக்கு காத்திருக்கிறேன்....
வார்த்தைகள் சொல்ல
நானும் கூண்டுகிளி தான்
என வாதம் புரிகிறாய்....

எப்படியொ பேசிவிட்டாய்.....

ஒரு நெல்மணிக்கு
காத்திருக்கும் கிளி போல தான்....
உன் ஒற்றை பார்வைக்கு
காத்திருக்கிறேன்....

தலை நிமிர்ந்து பாரேன்......

எழுதியவர் : கவிதை தாகம் (18-Mar-14, 2:04 pm)
பார்வை : 62

மேலே