இயற்கை - இழக்கிறேன்

மண்ணின் மணம் மாறா கிராமங்கள்
கிராமத்தின் வாசனை தொலைக்காத குக்கிராமங்கள்
நில விற்பனையாளர்கள் கால் பதிக்காத வயல்வெளிகள்
தேநீர் கடையில் தூக்கம் தொலைக்காத மனித முகங்கள்
நம்மிருப்பிடம் வந்த விருந்தாளி யாரென அறியத்துடிக்கும் பசுவின் குரல்
கிடையிலிருந்து எட்டி குதித்து மலர்ந்த ஆட்டுக்குட்டிகள்
முத்துக்களாய் குவிந்து கிடக்கும் உப்பளங்கள்
தென்றலை குத்தகைக்கு எடுத்த தென்னை மரதோப்புகள்
வெயிலின் தாக்கம் குறைக்கும் குளிர் காற்று
கடலுக்கு வேலியாய் உயர்ந்து நிற்கும் பனை மரங்கள்
மீன்களை வாயிற் கவ்வி வானில் வர்ண ஜாலம் படைக்கும் நாரைகள்
நிறைகுடமென அமைதியாய், ஆர்ப்பாட்டமின்றி இருக்கும் கடல்!!

இழக்கிறேன் இவை அனைத்தும்!!!

எழுதியவர் : (18-Mar-14, 9:37 pm)
பார்வை : 62

மேலே