சொர்க்கம் நிழலிலே
தென்னங்கீற்றின் ஜல்லடையில்
சுத்தமாகி ஜொலிக்கும் இளவெயில்
சோளக்கீற்றின் மினுமினுப்பில்
ரீங்கரிக்கும் சிலபல தும்பிகள்
தண்ணீர்கீற்றின் இரைச்சலில்
சுழலும் சொட்டுநீர் பாசனம்
எச்சில்கீற்றுகள் வடிந்தபடி
ஓய்வு அசைபோடும் காளைகள்
அரிவாள்கீற்றின் காயம்பட்டு
புத்துணர்ச்சி தரும் இளநீர்
பனைஓலைகீற்றீல் களைப்பாரும்
கந்தல்துணி ஏழை விவசாயி
கற்பனைக்கீற்றீல் கவிதைவந்தது
சொர்கம் விண்ணிலா மண்ணிலா .