ஈழத்து அநாதை

நான் தனிமையில் இருக்கிறேன்!
இல்லை
தனிமை படுத்தபபட்டுள்ளேன்!

ஆதரவு இல்லையென்று அழுத
இந்த அனாதையை அழைத்தது
அந்த குரல்!
அது,
என்னை இருட்டறைக்கு அழைத்துச்சென்றது.

அங்கே,
இருட்டின் நடுவே
மின்னியது சிறுவிளக்கு!
நான்-
குரல் வந்த திசையை நோக்கினேன்!
அங்கே சடலங்கள் சிதறிக்கிடந்தன!
குருதிகள் குளங்களாக தேங்கின!
மீண்டும் அந்த குரல்-
என் குடும்பத்தை அங்கே தேட சொன்னது!
ஆம்,
எங்கள் தொப்புள்உறவு எங்களை மறந்ததுவிட்டது!
அனுமன் இல்லாமல் எங்கள் ஈழம் எரிந்தது!
தீவின் கரைகளாக எங்கள் பிணம் அடுக்கப்பட்டது!
கல்லறைகளுக்கு இடமின்றி
பிணங்களும் காத்திருந்தது!
சந்தேகம் வேண்டாம்-
தீவின் நடுவில் மாட்டிகொண்ட
திக்கற்றவர்கள் தான் நாங்கள்!

பிரிந்து விட்ட எங்களை நீங்கள்
மறந்துவிட்டீர்கள் போலும்!
இங்கே
அநாதையானது நான் மட்டும்மல்ல!
என் குடும்பமும்தான்!
தூங்கும்போது காதோரம் பேசிய
நண்பன் காற்றோடு கலந்துவிட்டான்!
என்னை பார்த்து பார்த்து வளர்த்த
என் தாயின் முகம்
பார்க்காத தூரம் சென்றது!
என்காதை திருகி கண்டித்த
என் தந்தையின் குரல்கூட
அசரீரி ஆகிப் போனது!
என் கைகள் கோர்த்துச் சென்ற
என் அண்ணனின் நெஞ்சில்
தோட்டாக்கள் குடிப்பெயர்ந்துவிட்டது!
என் கன்னம் தேய்த்த என்
அக்காவின் புடவை கிழிக்கப்பட்டது!
நான் பாவம்-
இன்று தான் பள்ளிக்குச்
சென்றேன்!-அதனால்
காப்பற்றப்பட்டு விட்டேன்!
மீண்டும் அதே குரல்,
இருட்டிலே என் குடும்பத்தை
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!
இங்கே உடல்கள் குப்பையாய் கிடந்தது!
உறுப்புகள் உடலின்றி கிடந்தது!
இருட்டிற்கு பயந்து சுவரினை
உரசிச் சென்றேன்!
திடீரென்று,
என் கால் இடறியது-
கைகள் கோர்த்தப்படி ஒரு
குடும்பம் கிடந்தது!
அவர்கள்
கைகளை விரித்தேன்
கைகளுக்கு இடையே
கருகிய என் புகைப்படம்!

எங்களை மறந்த இந்தியாவே!
என் கண்ணீரை துடைதுவிடுவை!-ஆனால்
இந்த கண்ணீர் உன்னிடத்தில் வழியாமல்
பார்த்துக்கொள்!!!!!

இப்படிக்கு இலங்கைத்தமிழனில் மிஞ்சிய
"அநாதை"

எழுதியவர் : vibranthan (18-Mar-14, 11:13 pm)
Tanglish : iilaththu anaathai
பார்வை : 138

மேலே