-சீக்கிரம் ஒரு பதில் அனுப்பு---புதுக்கவிதை--திருமதி திலகவதியைப் பாராட்டி--
பெயர்சொல்லி அழைத்தாய்
உயிர்க்கதவு திறந்தது!
இதயம் சிதறி
இசைபோல் பரவ
எடையற்று மிதந்தேன்!
என்னையே தொலைத்தேன்!
என்
வசந்த வான் வில்லில்
வண்ணங்கள் இறைத்தாய்!
எண்ணமெல்லாம் நீயாய்
கண்ணிலெல்லாம் ரோஜா!
வேல்விழி மொழிகளை
வில்லிதழ் பரிமாற
ஈரம் காயுமுன்
இதயம் காய்ந்ததேன்?
சேருவோம் எனுமுன்
பிரிவோம் என்பதேன்?
வேர்விடும் போதே
நீர்தர மறுப்பதேன்?
கைகளில் கொடுத்த
ரோசா காயலாம்!
மெய்வழிப் பட்டு,என்
மூளை மடிப்பினில்
பெய்த,உன் நினைவுப்
பசுமைகள் காயுமோ?
கொய்தவை எடுத்துக்
கொல்வதும் கூடுமோ?
செய்வதென் ஒருபதில்
சீக்கிரம் அனுப்பிடு!
==== ======
பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்மையும் எழுத வைக்கும் ஒரு உந்துதலாக அமையும்;
அதற்க்குச் சாட்சியாக மேலே உள்ள கவிதையை நான் எழுத உந்துதலாக -184616-என்ற எண்ணின் கீழ்,திருமதி திலகவதி - எழுதியுள்ள கவிதை -யிருந்தது.
இதுபோன்ற கவிதையின் எண்ணும் கவிஞரின் பெயரும் இதைப் படிப்பவர்கள் அவரையும் சென்று படித்து ஊக்குவிப்பார்கள் என்ற நம்பிக்கையுல்தான் கொடுக்கப் -படுகிறது.
அவருக்கு எனது பாராட்டுகளாக இக்கவிதையை மட்டுமல்ல, எனது நன்றியினையும் சமர்ப்பித்து மகிழ்ந்து கொள்கிறேன்.
==== ======