என் காதல் கதை பகுதி 14

மனத்தால் வெறுத்தாலும்
நிஜமென மறுத்தாலும்
உண்மை காதல்களை
ரசித்திட மறந்ததில்லை

நிஜமாய் அமுதுமில்லை
அதுபோல் கடின விஷமில்லை
பருகிட துணிந்த மனதிற்கு
மரண பயமில்லை
காதலால் மரண பயமில்லை

புன்னகை முடியும் நிமிடம்
சிந்தனை தானாய் தொடங்கும்
காதலும் அதுபோல்தான்
முடிந்தால் தொடங்கிவிடும்

தாய்மடி காதலென்றால்
ஒரு இளம்பெண் தேவை இல்லை
உடல் சுகம் தேவை என்றால்
அதன் பெயர் காதலில்லை

காதலை ஒதுக்க முடியாமல்
ஏற்றிட இயலாமல்
ஒரு ஊமையின் கனவினை போல்
சப்தமாய் கதறி நின்றேன்
விதியை நொந்து கொண்டேன்

பார்க்கும் இடமெல்லாம்
அவள் நிழல்களின் நிஜங்களாய்
தொட்டிட தேடி நின்றால்
தொலைந்திடும் கானல் நீராய் .....


இன்னும் தொடரும் என் காதல் கதை ....

எழுதியவர் : ருத்ரன் (19-Mar-14, 7:46 pm)
பார்வை : 73

மேலே