மதுக்கடை

ஏட்டில் எழுதின கல்வியும்
எட்டாக் கனியாய் இருக்க
எட்டு வயதுக் குழந்தையும்
எட்டி டாஸ்மார்க் பாக்குது

பள்ளி செல்லும்
வழி தவறியதால்
போதை பயிலும்
இடமாக மதுக்கடை

வருங்கால தூண்களாய்
வர்ணித்த அப்துல் கலாமின்
கனுவுகள் வழுக்கி விழும்
இடமாய் மதுக்கடை

ரேசனில் அரிசிக்காய்
கா(ல்)மணி நேரம் கூட
நிற்க முடியவில்லை

காலையிலே
கடை திறக்கும் வரை
கால் கடுக்க நிற்கின்றான்
குடிமகன் மதுகடையில்

குடித்த போதை சுகத்தில்
குடி மகன்
உண்ண உணவில்லா சொல்லா
துயரில் உறவுகள்

தன் சாவை
தானே பணம் செலுத்தி
மனிதன் உறுதி செய்து
கொள்ளுமிடமாய் மதுக்கடை

விதவைகளின் இலவச
மகப்பேறு நடக்கும்
மருத்துவ மனையாய்
மதுக்கடைகள்

இமயம் தொட வேண்டிய
இளசுகள் சீரழிந்து
இன்று பாதாளம் வீழ
இயங்கும் கடை

"மதுக்கடை"

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (20-Mar-14, 3:24 pm)
பார்வை : 1982

மேலே