காதலியின் வேண்டுகோள்

இறந்த பின் தாஜ்மஹால் வேண்டாம்
இருக்கும் போது குடிசை கொடு!

இறந்த பின் இரங்கல் கவி வேண்டாம்
இருக்கும் போது நாலு வரி கொடு!

இறந்த பின் அஞ்சலி வேண்டாம்
இருக்கும் போது கடைக்கண் பார்வை கொடு!

இறந்த பின் துக்கம் வேண்டாம்
இருக்கும் போது இரக்கம் காட்டு!

இறந்த பின் மலர்ப்பாடை வேண்டாம்
இருக்கும் போது மடி கொடு!

இறந்த பின் உடல் தூக்க வேண்டாம்
இருக்கும் போது தோள் கொடு!

இறந்த பின் விசனம் வேண்டாம்
இருக்கும் போது அன்பு கொடு!

எழுதியவர் : geethabaskaran (20-Mar-14, 9:01 pm)
பார்வை : 137

மேலே