காதல் பிரிவு
வெந்நீர் ஊற்றுகிறது
உந்தன் நினைவுகள்!
மங்கள ராகமிடுகிறது
உந்தன் வார்த்தைகள்!
சுரம் சேர்க்கிறது
உந்தன் வாக்குறுதிகள்!
தாள நயமிடுகிறது
சுற்றியுள்ள சூழல்கள்!
காலிலிட்டு நசுக்குகிறது
கால சக்கரம்!
வழியும் விழிநீரில்
மனப் போராட்டம்!
நிதம் தவிக்கும்
உளப் போராட்டம்!
விதி நினைந்து
உயிர்ப்போராட்டம்!
வழி பார்த்து
களப் போராட்டம்!
பிரிவுக்கு பிரிவளிக்க
நீ வரும் நாள் எந்நாளோ!