அன்பு மகனே ஆசை மகனே தாய் மகனுக்கு கூறும் அருவுரை கவிதையாக

ஆசை மகனே அன்பு மகனே
எங்கள் இல்லம் கண்ட வரமே
உந்தன் கடமை நிறைய இருக்கு
உணர்ந்து வாழ்ந்தால் என்றும் சிறப்பு ......

உற்றார் போற்றும் ஒழுக்கம் வேண்டும்
உயர்ந்தோரோடு பழக்கம் வேண்டும்
நற்சான்று பெற்று வாழ்தல் வேண்டும்
நல்லவன் என்னும் பேரே வேண்டும் ......

பெற்றவர்க்கு நீ பெருமை சேறு
மற்றவர்க்கு நீ உதவி பாரு
உன்னில் நிம்மதி தானே பிறக்கும்
உன்னால் எமக்கு பேரும் கிடைக்கும் ......

உலகில் பிறந்த மனிதர் எல்லாம்
உன்னுடன் பிறந்த மனிதர் ஆவார்
ஒருவரை இகழும் வார்த்தை வேண்டாம்
ஒருநாளும் மனத்தால் கெடுதல் வேண்டாம் .....

துரோகத்தால் வாழ்வில் இன்பம் இல்லை
அவர் துயரால் உனக்கு பயனும் இல்லை
உதவி வாழ்தலே மனிதனின் சிறப்பு
ஊருக்கு உழைத்தலே உந்தன் பொறுப்பு .......

உன்னை மாற்றும் காலம் இதுவே
உள்ளத்தாலே குழப்பம் வேண்டாம்
கெடுவதற்கு இங்கு வாய்ப்புகள் அதிகம்
கெட்ட பின்பே அழுவது அவலம் .......

எல்லோர் உயர்விலும் பங்கு கொள்ளு
ஏழைக்கெல்லாம் உதவி செய்யு
உன்னால் முடியும் என்றே எண்ணி
ஊருக்கு நீயும் உதவி செய்யு ........

நாளைய நாட்டின் தூண்தான் நீயே
நம்பிக்கை உன்மேல் நிறையவே இருக்கு
உன்னை பார்த்து பலரும் வாழ
உயர்ந்த வழியை நீயும் தேடு ......

சோம்பல் எண்ணம் உன்னில் வேண்டாம்
சோகமாக்கும் உந்தன் வாழ்வை
செயல்களில் அனைத்தில் துணிவை கொள்ளு
நாளை சேர்வாய் இமயம் சென்று .......

உன்னை பெற்ற அன்னைக்கு தானே
உந்தன் உயர்வில் அக்கறை இருக்கும்
எந்தன் பேச்சை இணங்கி கேட்பாய்
எல்லா நாளும் புகழை சேர்ப்பாய் ........

அன்னை சொல்லும் அறிவுரை எல்லாம்
அலட்சியம் மறந்து மனதில் பதிவாய்
உன்னை பெற்ற எனக்கு நீயும்
உயர்ந்த பேரை பெற்று தருவாய் .........

எழுதியவர் : வினாயகமுருகன் (21-Mar-14, 8:41 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 115

மேலே