புனிதம் கெட்ட அரசியல்

நாளொன்றும் பொழுதொன்றுமாய்
நாளுக்கு நாள் புதுப்புது கட்சி
நலிவடைந்தே போகுது
நம் மக்கள் சக்தி ........

மதத்தாலும் ஜாதியாலும்
பிரித்தது போதாதென்று
மனிதன் பிரிந்துகிடக்கிறான்
கட்சிகளின் பேதத்தால் ........

அன்றாடம் மாறுகிறது
அரசியல் கொள்கைகள்
அதனால் நாறுகிறது
மக்களின் நிம்மதி ..........

கொடிகளின் கூட்டணிக்கு
கோடிகள் இலக்கு
கொடிப்பிடித்த மனிதனுக்கு
கோமணம்தான் பரிசு .......

ஜனநாயகத்தை
பணநாயகத்தால் வெல்லும்
பலசாலிகளின் கூடாரமே
அரசியல் கூடாரம் ......

நல்ல மனிதரெல்லாம்
நாசுக்காய் ஒதுங்கிவிட
வன்முறையாளர்களின்
வசமாகிவிட்டது அரசியல் ......

கொள்கைக்கான கூட்டணிகள்
குப்பையாய் போகிவிட
கோடிகளுக்காக அல்லவா
கூட்டணி நடக்கிறது ........

மதத்தையும் ஜாதியையும்
மறக்க சொல்லும் மனிதர்கள்
கட்சிகளின் பெயரில்
காட்டுகிறார் அடையாளத்தை ........

அராஜகவாதிகளின்
ஆணவ ஆட்டத்தில்
அநியாயமாய் போகிறது
அப்பாவிகளின் உயிர் .......

பட்டைக்கும் பிரியாணிக்கும்
பரிதாபமாய் இலக்காகிறான்
ஏழைக்குடிமகன் ...........

சிலரது சுகவாச வாழ்க்கைக்கு
பலரது வாழ்க்கையை
பலிகடா ஆக்குகிறது
பாழும் அரசியல் ...........

எதை எதையோ நம்பி
இதுவரையில் ஏமாந்தது போதாதா
மாறவேன்டியவர்கள் அவர்களில்லை
நாம் தான் .......

சரியான நபருக்கு
சரியான வாக்களித்து
சரியான பாடத்தை
நீங்கள் புகட்டுங்கள் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (21-Mar-14, 9:11 am)
பார்வை : 1124

மேலே