சிறை மீட்க மௌனம் கலைப்பாயா

ஏனடி உன் நினைவுகளுக்கும்
இத்தனை சுயநலம்
என்னை உனக்கென்று வசியபடுத்துவதில்....

நீ ஒவ்வொரு நாளும்
கொடுக்கும் காதல் நினைவுகள்
நித்தம் நித்தம்
தனிமை படுத்துதடி
என்னை
இவ்வுலகை விட்டு...

உரிமை கொண்டு உன் பார்வை
என் மீது விழும் முன்னரே,
உன் நினைவு சிறை என் உயிரையும்
உடலை விட்டு
தனித்துவிடுமோ???

நம் இடை மௌனம் நீ கலைத்து
என்னை சிறை மீட்க ஏங்குகிறேன்........

எழுதியவர் : மௌன இசை (22-Mar-14, 5:56 pm)
பார்வை : 100

மேலே