விரும்பும் வாழ்க்கை
பஞ்சம் இல்லா பாரினிலே
வஞ்சம் இல்லா மனிதர் வேண்டும்!
துயரம் இல்லா பூமியிலே
கயவர் இல்லா வாழ்க்கை வேண்டும்!
சாதி இல்லா சமுதாயத்தில்
மோதல் இல்லா வாழ்க்கை வேண்டும்!
மதங்கள் இல்லா மண்ணிலே
பேதங்கள் இல்லா வாழ்க்கை வேண்டும்!
களவு இல்லா பூமியிலே
உளவு இல்லா வாழ்க்கை வேண்டும்!
அழகு நிறைந்த பூமியிலே
மகிழ்வு நிறைந்த வாழ்க்கை வேண்டும்!
ஆற்றல் நிறைந்த பூமியிலே
தூற்றல் இல்லா வாழ்க்கை வேண்டும்!
வேடமிடா மனிதர் வாழும்
கபடம் இல்லா வாழ்க்கை வேண்டும்!