தாத்தா சொல்ல தட்டாதே
தாத்தா : பேராண்டி.....அக்குள்ள கட்டி ஒண்ணு வந்திருக்கு....அத டாக்டர்ட்ட காமிக்கணும்.நீ வரும்போது அக்குள் பாக்குற டாக்டர் எப்போ வருவாருன்னு கேட்டுட்டு வா...
பேரன் : என்னாது அக்குள் பாக்குற டாக்டரா...என்ன தாத்தா சொல்றே?
தாத்தா : அதாண்டா....இந்த... ஊசியா குத்தி பாப்பாங்களாமே.... அதுக்குப் பேருகூட.....பேருகூட.....ஆங்.....அக்குள்பங்சர்....
பேரன் : ஆ....தாத்தா கடுப்பேத்தாத... அது அக்குள்பங்சர் இல்ல அக்குபங்சர்.....
தாத்தா : டேய்...அதெல்லாம் எங்களுக்கு தெரியும் .எல்லாம் ஒண்ணுதான்...நீ டாக்டர் வர்ற நேரத்தை மட்டும் பாத்துட்டு வாடா...