மரியாதை எனும் விடுதலை
வீட்டை விட்டு
வெளியேறியதும்
கறுப்பு பூனை பாதுகாப்பு
அலுவலகம் சென்றதும்
மொய்க்கும்
ஈக்களாக நட்பு நச்சரிப்பு
பேருந்தில் ஏறியதும்
சதை உரசும்
ஜீவன்களின் அருவெறுப்பு.
மேலாடை விலகியதும்
கொத்தும் பாம்பு
பார்வையில் ஜொல் வடிப்பு
பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.
சங்கட சிறையில்
நொந்தே சாகிறது உணர்வுகள்.
சில நொடிகள் கூட
பல ஆண்கள்
கொடுப்பதில்லை
மரியாதை எனும் விடுதலை.
பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.
தனியாக நடக்கும் போது
தன்னிச்சையாக ஆடை விலகும் போது,
ஆண்மையான ஆண்கள்
வக்கிரமில்லாத நட்பில் பழகும் போது,
கிடைத்தாலும் கிடைக்கலாம் விடுதலை.
நாகரீக நகரங்களில்
பன்னாட்டு அலுவலகங்களில்
தற்காலிகமாக கிடைக்கலாம்
பெண் விடுதலை.