அப்பளம்
ஷ் ...ஷ் ......
அழுத்தி சொல்லாதீங்க .
உடைஞ்சுடும் ...
எண்ணெய் புகையின் வாசனையில்
எனை மறந்தேன் ..
என் தட்டில் விழுந்ததும்
என் வயிற்றின் துடிப்பில் மௌனமானேன் ..
கடித்தவுடன் கரைகின்றாயே
கரைந்தவுடன் கடிக்க தூண்டுகின்றாயே
உமிழ் நீரை சேகரித்தால்
மழை நீர் திட்டம் உருவாக்கலாம்
கவர்ச்சியால்
காந்தமாய் இழுக்கின்றாயே
காலம் காலமாய் எல்லோராலும்
காதலிக்க படுகின்றாயே
உன் இளமையின் ரகசியம் தான் என்ன ????