சந்தர்ப்ப வாதம்

சந்தர்பவாதம்
நுழைந்தது அரசியல் தந்திரமாய்
ஆனது அரசியல் சாத்திரமாய்
உதடுகள் எல்லாம் உச்சரிக்கும்
அரசியல் சந்தை மந்திரமாய் !
வாய்மையே வெல்லும் எனும் வேதம்
அரசாங்க அலுவலக சுவரில் நிற்குது
செப்புப் பலகையில் எழுதிய சித்திரமாய் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-14, 8:54 am)
Tanglish : santharbba vaatham
பார்வை : 435

மேலே