நிறபேதம்

நிறபேதம்
-------------

ஆண்டவன் நம் பார்வைக்களித்த நிறங்கள் ஏழு

இந்நிறம் எல்லாம் அவன் என்று அறிந்த பின்னும்

நமக்கென்ன நிற பேதம் சொல்லடி கிளியே

கருப்பென்ன வெளுப்பென்ன நிறத்தில் கிளியே

நிறமெல்லாம் நெஞ்சத்திற்கு உகந்தவைக்- கிளியே

வானவில்லிற்குள் எழு நிறங்கள் வைத்தான்

அவை எல்லாம் மயக்கும் மாய நிறங்கள் -அன்றோ

உயர்வு தாழ்வு இன் நிறங்களில் இல்லை

பின்னர் மனிதனில் மட்டும் நிறபேதம் எதற்குக் -கிளியே

கருப்பு வெளுப்பு என்று மனிதன் மனிதனைப் -
பிரித்தான்

பின்னர் உரிமைப்ப் பறித்து கருப்பரை அடிமை -
என்றான்

நிலைமை இன்று மாறி வந்தாலும்
நிற பேதம் அவன் மனதை விட்டு முற்றும் -
போகவில்லைக் கிளியே

கருப்பும் ஓர் நிறமென்று அறிந்துவைக் கிளியே

அதுவும் ஓர் அழகான நிறமென்று உணர்ந்திடு -கிளியே

நான் வணங்கும் கண்ணன் கருநீல வண்ணன்

கரு நீல குயிலுக்கு குரலில் இனிமை

கருப்பான மனிதருக்கும் ரத்தம் சிவப்பே

வெள்ளை மனிதனுள்ளும் ரத்தம் சிவப்பே

கருப்பின் அழகே அழகு காந்தல் ருசியே ருசி

வர்ணத்தால் மனிதரைப் பிரித் திடாதே கிளியே

பேதம் ஏதும் இன்றி வாழ்ந்திடு கிளியே

-------------------------------------

எழுதியவர் : வசவன்-வாசுதேவன்-தமிழ்பித (24-Mar-14, 12:27 pm)
பார்வை : 125

மேலே