காதலோடு கொஞ்சம் கருத்து வேற்றுமை

கடற்கரை என்றால் - அதில்
கால் தடங்கள்
காதல்....

கவிதை என்றால் - அதன்
கருத்தினிமையில்
காதல்....

காலைப் பொழுது என்றால்
கச்சிதமாய் பில்ட்டர் காபி
காதல்.....

எனினும்

காய்ச்சல் வந்தது என்றால் நாவில்
கசப்புச் சுவையில்
காதல்

அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்....
கல்யாணச் சுவை என்றால் என்ன என்பது......

என

கடுப்போடு
கடைசி மூன்று வரியை இதில் எழுதி விட்டு....
கத்திக் கொண்டே ஜன்னல் வழியே....
குதித்து ஓடியது ஒரு உருவம்.......

அங்கே ஓடுவது யார்....?
கொஞ்சம் நில்லுங்கள்.......
என்று கத்தியபடியே ஜன்னல்
கண்ணாடியைப் பார்த்தேன்....

தெரிந்த என் பிம்பத்துக்குள்
தெரியவில்லை மனசாட்சி........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (24-Mar-14, 8:03 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 69

மேலே