காதல் - யாரடி நீ

யாரடி நீ ....

ஏய் பெண்ணே ,நீ இல்லாத உலகத்தில்
என்ன செய்வேன் நானும் ??

மண்ணோடு செறிந்து மக்கி போவேனோ
உன் கண்ணோடு தொலைந்த காரணத்தால்
கண்ணீரில் கரைந்து போவேனோ
இமைகள் இரண்டினையும் மூடி உன் பேரை
உச்சரித்து முக்தி அடைவேனோ ??

கண்கள் மூடினால் கனவாகிறாய்
கண்கள் திறந்தால் என் உதட்டில்
புன்னகை ஆகிறாய் - யாரடி நீ????
பேரழகிகளின் மத்தியில் தடுமாறாத
என் இதயத்தை , பல மைல் தொலைவில்
இருந்து இடம் மாற்றிவிட்டாய் யடி என் கள்ளி
யாரடி நீ .....

எழுதியவர் : நரி ஒ ஒ (24-Mar-14, 11:10 am)
சேர்த்தது : நரி ஓ ஒ
பார்வை : 98

மேலே