விடிவதற்காக
நவம்பர் மாத மழைதூறல்
இடைநின்று ஓய்வெடுத்த
ஓர் குளிர்ந்த இரவு.
நிரப்பப்படாத நாற்காலி
நிரப்பிய தேநீர்கோப்பை
பருகப்படாமல்
ஆறியபடியே.....
பிரயத்தனப்பட்டு
முகில்காடுகளை
விலக்கி முன்னேறியபடி..
வான் கடக்கும் முயற்சியில்
தனிமையில்
நீல வெண்ணிலா ...
இரவை நகர்த்தும் முயற்சியில்
'ஒரு யாத்ரீகனைப் போல
உன் நினைவுகளின்
அலைக்கழிப்பில்
சாளரத்து விளிம்போரம்
வெண்நிலாப்போலவே....நான்..