மீன்களைத் தீண்டாத குளங்கள்
ஒரு ஜோடிக் கண்களில்
சுற்றிப்பார்த்த உலகம்
தேடித்தேடியும் கிடைக்கவில்லை
நான் தேடும் புது யுகம் ...
கைப்பையில் தேநீர் வாங்குகிறேன்...
இளநீரில் மீன்கள் வளர்க்கின்றேன் ...
நீர்மூடாத நிலத்திலும்
நான் படகை செலுத்துகிறேன்
நீரும் மண்ணும் கலந்த போதும்
மண்வாசம் பிறக்கவில்லை ...
சேறும் விதையும் கலந்த போதும்
தளிர் ஏதும் முளைக்கவில்லை ...
இன்னும் ஏதேதோ தேடுகின்றேன்
இது நம் பூமிதானா? முழிக்கிறேன் ...
இது வரை உண்மைகள் காணவில்லை ...
படிப்பில் பொய்கள் சொல்லித்தரவில்லை ...
உண்மைகளைத்தேடி போகின்றேன்
என் கல்வியை கானல் நீராய் பார்க்கின்றேன்
நிஜம் இப்போது புரிந்தது
விஷம் இருப்பது தெரிந்தது
கல்வி எல்லாம் கண்துடைப்பு
பாடம் எல்லாம் வாயடைப்பு ...
உலகத்தின் பாகங்கள்
பணம் என்று சொல்லுங்கள்
வள்ளுவன் வரைந்த வார்த்தைகள் ....
அனைத்தும்
மீன்களைத் தீண்டாத குளங்கள் ...
புத்தகச் சுமைகளோடு க நிலவன்