வாடி கொஞ்சம் காதலிக்கலாம் -- மணியன்

காதலில் வீழ்ந்தால்
கவிதைகள் பிறக்குமாமே. . !
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . .

நிலவும் பல நேரம்
நினைவுகளைச் சுடுமாமே .!
தொட்டு ரசிக்கலாம்
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . .

பகல் இரவு
உறக்கம் தொலையும்
துயிலாமலும் கனவு வரும்
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . .

கற்கண்டும் கசக்கும்
காதவழி அடி சுருங்கும்
களித்தவர்கள் கதைக்கக் கேட்டேன் .
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . . .

இதயம் துடிப்பது
இரு மடங்காகும். . .
இரு விழிகள் உருமாறும். . .
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . . .

நொடிப் பொழுதும்
ரணம் ஆகும். .
நெடுங்கதவாய்
நெஞ்சம் திறக்கும். . . .
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . .

உணவும் இனி விடமாகும் .
உன் நினைவே மருந்தாகும். .
உள் மனதில்
உன் உருவம்
உலகமெனக் குடியேறும். . .
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . .

புவி கூடப் புள்ளியாகும்
புருவம் இமைப் பள்ளியாகும் .
பருவ வாசல் வந்து தினம்
பாய் மரமாய் நினைவு ஆடும். . .
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . . .

எண்ணம் எங்கும்
வண்ணக் கோலம்
பொன்னெனவேப் பொங்கி மிளிரும். . .
பொறுத்தது போதுமடி
வாடி பொன்னே காதலிக்கலாம். . . .

இமையச் சுமையாய்
இதயம் கனக்கும். . .
இரும்பு மனமும்
அரும்பாய் தளிரும். . .
இனியும் தயக்கமேனோ. . .
வாடி கொஞ்சம் காதலிக்கலாம். . . . .

தோல்வியிலும் வெற்றி காணும்.
தோகையென மனமும் விரியும். . .
காலமெலாம் நமது காதல். .
காவியமாய்ப் பரந்து ஒளிரும். . .
காதலால் நடந்து வாடி
காதலாய்க் காதலிக்கலாம். . . .
காலத்தை நாம் ஜெயிக்கலாம். . . . .



*-*-*-*-* *-*-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (24-Mar-14, 5:34 pm)
பார்வை : 209

மேலே