முயன்றிடு வென்றிடு

வாழ்கை பாதை கடினம்தான்...
வாழ்ந்து காட்ட வேண்டும் நாம் !
கசங்கிடும் காகிதத்தை எண்ணி
இருந்தால் கருத்துக்களை நன்றாய்
படைத்திட முடியாது .....
எடுத்திடும் முயற்சியை
வீணாய் எண்ணினால் வெற்றியை
சுவைத்திட முடியாது ....
கால்களை நகர்த்த மறந்தால்
கஷ்டத்தை கடக்க முடியாது...
நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் சுவடுகளாய் பதிந்திடும்!
காத்திருந்தால் வென்றிட முடியாது....
முயன்றிடு....வென்றிடு..... வாழ்வின் கடினத்தை!

எழுதியவர் : வேல்விழி (24-Mar-14, 5:19 pm)
சேர்த்தது : velvizhi
பார்வை : 126

மேலே