உயிரே…
என் கைப்பேசி சிணுங்கலில் விழித்தெழுந்தேன்-
குறுஞ்செய்தியாய் உன் வார்த்தைகளுக்காக,
உன் விழியென்னும் கோட்டையினில் தேடுகின்றேன் -
என் காதல் எனும் புதையலுக்காக ,
உந்தன் உதட்டுச் சாயத்தில் கரைந்திருந்தேன் -
என் முத்த வரம் வேண்டுதலுக்காக,
என் வாழ்க்கைத் தருணங்களை நிறுத்தி வைத்தேன் -
உன் குறும் புன்னகைக்காக,
உந்தன் இதய அறையில் ஒளிந்திடுவேனா -
என் உயிரில் சரி பாதி கொடுப்பதற்காக …!
-பாலகுமார்