என் அன்பு தோழியே
என் அன்பு தோழியே!...
நட்பெனும் நந்தவனத்தில் தென்றலாய் உன் நினைவுகள்!...
நம் நட்புக்கு இலக்கணமாய் எதையும் சொல்லிவிட முடியாது!..
சோர்ந்திருக்கும் நேரத்தில் அன்னையாய்
அன்பை பொழிகிறாய்,
தவறு செயும் போது கண்டிப்பதில் தந்தையாய்,
நேசம் காட்டுவதில் சகோதரியாய்,
பாசம் காட்டுவதில் சகோதரனாய்,
இப்படி எல்லா உறவுகளும் ஒன்றாய் உன் வடிவில்!...
நீ நட்புக்கரம் நீட்டும் போதேல்லாம்
தாய் மடி தேடும் குழந்தையாய் நான் மாறி
அன்பெனும் சாரலில் தினம் நனைகிறேன்!....