நம்பிக்கை

கடந்து வரும்
பாதைகள் அனைத்தும்
காதலர்களின்
பாதச் சுவடுகள்..

கலங்குகிறது
என் கண்கள் ..

காத்திருக்க சொன்னவன்
காலத்தை சொல்லாமல்
போய் விட்டான்.

வருடங்கள்
பல ஆகி விட்டன.

காதலனும் வரவில்லை
கடிதமும் அனுப்பவில்லை.

கண்ணீர் துளிகளோடு
காற்றை
தூதாக அனுப்புகிறேன்.

என்னவன்
என்னை வந்து சேருவான்.

என்ற நம்பிக்கையோடு..

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (25-Mar-14, 11:51 am)
Tanglish : nambikkai
பார்வை : 175

மேலே