காலணிகள் கதையிது

என் கதை சொல்கிறேன் நான்
உள்ளேன்றும் புறமென்றும்
என்னை தனித்தனியே தரம்
பிரிக்கப்பட்டேன் நானில்லாமல்
வெளியில் செல்வதில்லை
கல்லிலும் முள்ளிலும்
கவலையின்றிநீ நடாந்திட
உற்ற துணையாய் உன் கூடவே
பல வண்ணங்களில் உங்கள்
எண்ணங்கள் ஏற்றாற்போல்
என்னழகு உள்ளது இளமைதான்
கவர்ச்சி என்பதைப்போன்று
புதிதாயிருக்கும்போது என்னை
பாதுகாப்பதும் அவசியமாகிறது
காரணம் வேறெதுவுமில்லை
கல்யாண பந்தலிலும் சரியே
கருமாதி பந்தலிலும் சரியே
கழற்றிவிட்டு உரியவன் உள்ளே
சென்றால் கயவன் என்னை
கவர்ந்து சென்றுவிடுகிறான்
ஆதால் என்மீது அக்கறையுண்டு
புதிதாய் நான் இருக்கமட்டும்
ஆற்றை கடக்கும்போது மட்டும்
ஆறுதலெனக்குஅப்போதுதானே
உயரத்தில் தூக்கிபிடிக்கிறார்கள்
என்னை பற்றிய சிறு தகவல்
நான் சொல்லியாகவேண்டும்
காலனியணியாதவன் சிந்தை
சிதைகிறதென இன்றைய
அறிவியல் ஆய்வறிக்கை கூற்று
அன்றே இதை சொன்னார்
எம்பெருமானார் காலனி
அணியாதிருப்பவர் வாக்குறுதியும்
சாட்சியும் செல்லாதென்றார் ,,,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-Mar-14, 1:58 pm)
பார்வை : 229

மேலே