திராவிடம் வேண்டும் வேண்டும்
யாதும் ஊரே ......
என்றீர்
யாது நமது ஊர் இன்று ....?/
ஏது நமக்கென்று ஓர் ஊர் ....?/
தீது உரைக்கும்
சம்ஸ்கிருத வேத சந்ததிகளும்
காது கிழியப் போதிக்கும்
வன் வருண வாழ்க்கை முறைகளும்
ராகு கேது என நம்மை பலிக்கொள்ளச் சுற்றும்
ஆரிய சூரிய கிரகமும் .....
அவர் பெண்களில் மயங்கிக் கிடக்கும்
ஈன இந்திரக் கடவுளும் ......
அவர் பஞ்சாங்கங்களுக்கு பல்லிளிக்கும்
ஊனச் சந்திரக் கடவுளும் ....
கடவுளுடனும் கள்ளக் கூட்டு வைக்கும் .....
புரியா மொழி மந்திரமும் .....
பூணூல் கட்டிக் பூச்சாண்டிக் காட்டும் ......
பார்ப்பனீய தந்திரமும் .....
மறை நூல் காட்டி நம்மை ஏய்த்துப் பிழைக்கும் .....
ஆரிய கபட எந்திரமும் ....
சூழ்ந்த சாப நிலமோ ?
நமக்கெஞ்சிய நம் திராவிடத் திரு ஊர் ?/
பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் .....
நஞ்சம் விதைத்து ....
நம் நஞ்சை புஞ்சைகளை ....
வஞ்சமாய் வளைத்து ....
பஞ்ச மஹா பாவம் செய்த
ஆரியக் குடுமிகளுக்கு
உறுமி அடிக்கவா .....
உயிர்ப் பெற்றோம் திராவிடராய்?/
பறை அடித்து
நாண் மேல் நடந்து ....
யாசகத்திற்க்கு.......
யானைப் பழக்கி
குதிரைக் களவாடி ....
இனப்பெருக்கம் செய்து ......
விற்றுப்
பிழைப்பு நடத்தி .....
அவைகளை உண்டு
திளைத்து ....
மறையின் பெயரால் ...
மரித்த குதிரையுடன்
அவர் அரசி புணரும் ...
இழி ஆரியச் சடங்குக் காணவோ ...
பிறந்தோம் திராவிடராய் ......?/
சூரிய புத்திரர் இல்லை அவர் ....
காரியப் புத்திரர் ...
காரியத்திற்காக கூரிய சொல் மந்திரம் கொண்டு .....
திராவிட வீரியம்
குறைத்துக்
குளிர்க் காயும் கூரிய மூக்கினர் .....
மூர்க்கத்தில் முக்தி தேடும் ....
யக்க்ஷ யாக்கைகள் .....
வந்தேறிகள் அவர் வாழவும்
வழி வழியாய் வாழ்ந்த நாம் மாளவுமோ
உருப்பெற்றோம் திராவிடராய் ?
மந்திரமோது ....
மௌனமாய் இரு ....
உழைத்து வாழ் ....
நினையாதே ஊழ்.....
திராவிடர் பயணம் .....
தடுக்க முயன்றால் ....
தந்திரம் செய்து ...
தரிக்காது உன்
ஆரிய உயிர் .....
தென்னாடுடைய சிவனே ....
வேண்டாம் எமக்கு எந்நாடும்....
வேண்டும் திராவிடமாய் எமது ....
திரு திராவிட நாடு .... ....
பிழைப்பான் எங்கும் ....
ஆரியன் நாடோடி......
திராவிடர் நாம் பிழைப்பது
எங்கு ஓடி ?////////////