இழந்த நாட்களை ஈடு செய்து காதலிக்கிறேனடா-வித்யா

அவன்
காதல் பார்வைகளின்
விரல் பிடித்து
ஆழ்துளை கிணற்றின்
அடி ஆழம் செல்கிறேன்.........!
அழைத்துச்செல்கிறான்
தூக்கிச்செல்கிறான்
இழுத்துச்செல்கிறான்
இதழ்களால் எனை
ஈரப்படுத்திக்கொண்டே.......!
என் ரத்த நாளங்கள்
எகிறிகுதிக்க......
இன்னும் எனை
உள்ளிழுத்துக்கொள்கிறேன்......
அவன் அணைப்பிற்குள்
அடக்கமாக.......!
நான்கு சம நேர்கோடுகள்
இணைந்து எடுத்த இறுதி
முடிவு-சதுரம்.....!
அதில் நான் சிக்கித்தவிக்கிறேன்....!
ஆறுமாதமும் இப்படித்தான்
கனவில் வாழ்கிறேன்.......!
அவனை பட்டாளத்திற்கு
அனுப்பி விட்டு.........!
ஒரு நாள்......
போரின் பிடியில்
கைகளை இழந்து
நிராயுதபாணியாக
வந்து நின்றான் என்னவன்.............!
இருந்தாலென்ன
என்றும் அவன்தான்
என் வாழ்க்கையின்
நம்பிக்கை நட்சத்திரம்...........!
இழந்த நாட்களையெல்லாம்
ஈடு செய்து காதலிக்கிறேன்....
இன்றவனை இன்னும்
உள்ளிழுத்துக்கொள்கிறேன்
இறுக்கமான என் அணைப்பிற்குள்
அடக்கமாக........!