காதலின் கொடுமை
![](https://eluthu.com/images/loading.gif)
குறிஞ்சி என்றால்
மலைகள் தொடரவேண்டும்!
முல்லை என்றால்
காடுகள் பரவவேண்டும்!
மருதம் என்றால்
வயல்கள் விளையவேண்டும்!
நெய்தல் என்றால்
கடல்கள் அலையவேண்டும்!
பாலை என்றால்
பகலவன் மிளிரவேண்டும்!
பெண்ணே!
நீ இல்லாததால் - இவை
அனைத்தும் என்னுள் தெரிகிறதே!
தோல்விகள் இல்லையென்றால்
வெற்றிக்கு மதிப்பில்லை!
வெற்றிகள் இல்லையென்றால்
தோல்விக்கு சிறப்பில்லை!
எதுவும் தனியே இருந்தால்
யாருக்கும் புரியாது அதன் பெருமை
காதலியே!
நாம் பிரிந்திருப்பதையா
புரிந்துவிடப்போகிறது உலகம்!