உன் பிரிவால்

என் இதயத்தில் இன்று பனிப்பொழிவு.

இது ஒரு வானத்தின் அழுகை;
அழுகிறது நரம்புகள்,
ஆறுதல் புரிகிறது குருதி;
கண்கள் கனவுகளை துரத்திவிட்டது,
கண்ணீரை தத்தெடுத்து;
தலைக்கு கணம் மகுடமாக சூடப்பட்டது,
ஆனால், அது தலைக் கணம் அல்ல;
இரவில் வானம் மதி விழியால் அழுகிறது,
கண்ணீர் நட்சத்திரங்களாக வழிந்தோடியது;
ஒரு நிலவின் அழுகையை கண்டு,
இன்று ஒரு அதிகாலைச் சூரியன் தீக்குளித்தது.

எழுதியவர் : கறுப்புத் தமிழன் (26-Mar-14, 12:04 pm)
Tanglish : un pirival
பார்வை : 394

மேலே