+ஒதுக்கிடாதே எனை வெறுத்து +

என்னடி மறந்தாய்
எப்படி மறந்தாய்
அப்படி எப்படி மறந்தாய்

உன் வசம் வந்த‌
என் மனம் துடிக்க‌
இப்படி எப்படி மறப்பாய்

அன்பினை மறந்தாய்
ஆசையை மறந்தாய்
இத்தனை எத்தனை மறந்தாய்

பக்கத்தில் நின்ற‌
பாசமும் பதற‌
அத்தனை எத்தனை மறந்தாய்

கண்ணீர் கண்களை கழுவ‌
வேதனை மனதினை தழுவ‌
சோதனை சாதனை நிறுத்து
ஒதுக்கிடாதே எனை வெறுத்து

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Mar-14, 6:06 am)
பார்வை : 338

மேலே