தொலைந்து போன காதல்
கற்பனையில் வாழ்ந்து வந்த காரணத்தால்
ஏனோ சேர முடியாது போய்விட்டது
மதமேறிய மதங்களால் தானோ
மாயமாய் போனது நம் காதல்
பாவப்பட்ட மனது நினைத்த குற்றத்திற்காக
மரணிக்கிறது நிதந்தோரும்
கருவிழி உருளும் புறமெலாம்
என்னைச்சுற்றி உன் உருவம்
உயிருக்குப் போராடுகிறது உள்ளம், நீ
எடுத்துச் சென்ற சுவாசக்காற்றைத் தேடி
திருடப்பட்ட இதயம் திரும்பவில்லை
என்னிடம் இன்றுவரை,,,,
உள்ளுக்குள் உணரும்போது
மழைபொழிகிறது என் விழிகள்
காணோளியாய்க் காண்கிறேன் காற்றில்
நம்
“தொலைந்து போன காதலை”